(எஸ்.அஷ்ரப்கான்)


சமூகசேவையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்து வரும் கல்முனை எஸ்.தஸ்தகீர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் உப தலைவராக  ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமையையிட்டு அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்கள் புத்திஜீவிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை வை. எம்.எம்.ஏ. பேரவையின் வருடாந்த மாநாடு, பதுளை கெப்டல் சிற்றி கேட்போர் கூடத்தில்  பேரவையின் தேசியத் தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில்  நடைபெற்றது.

இதில் 2023/2024 காலப்பகுதிக்கு நாடு முழுவதும்  செயற்படுவதற்காக 
5 உபதலைவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களில் முதன்மையானவராக; சிரேஷ்ட உறுப்பினராக அல்-ஹாஜ் எஸ்.தஸ்தகீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அடுத்த தேசியத் தலைவராக வருவதற்கான சகல தகைமைகளும் இவருக்கு இருக்கின்றது.

இவர் கடந்த மூன்று தசாப்த காலமாக சமூக சேவை, சாரணியம், சுகாதாரம் போன்ற பல சேவைத் துறைகளில் நேர்மையாகவும், இறையச்சத்தோடும், தூய்மையாகவும் தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வருகின்றார். இதன் ஓர் சான்றாகவே  கட்டுக்கோப்பான உயர் சமூக சேவை அமைப்பான அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் உயரிய சபையில் தேசிய உப  தலைவராக
இவ்வருடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சாய்ந்தமருது வை. எம்.எம்.ஏ கிளையின் தலைவராக பல வருடங்கள் செயற்பட்டு கிளையின் சிறந்த பாடசாலை செயல்திட்டம் மற்றும் சிறந்த பாலர் பாடசாலை செயல் திட்டம் 
 சிறந்த செயல் திட்டமாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னின்று உழைத்தார்.

பேரவையின் கிழக்கு மாகாணத்தின் பிராந்திய பணிப்பாளராக இரண்டு வருடங்களும் போதைப்பொருள் தடுப்புக்கான பிரிவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளராக இரண்டு வருடங்களும் செயற்திட்ட தவிசாளராக சுமார் 13 வருடங்களும் செயற்பட்டு இலங்கையின் பல மாவட்டங்களுக்கு தேசிய துறை சார்ந்த போதைப்பொருள் தடுப்பு வளவாளராக செயல்பட்டார்.

இவர் பயிற்சிகளை இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று துறை சார்ந்த பயிற்சிகளை  பெற்றிருக்கின்றார்.

மேலும் கடந்த மூன்று வருடங்களாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசிய உப தலைவராக செயற்பட்டு வந்த நிலையிலேயே இவ்வரிடமும் தேசிய உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின் நிரந்தர உறுப்பினரும் ஆவார்.  பேரவையின்  செயற்பாடுகளில்  கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தன்னலமற்ற சேவைகளை செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours