இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க  அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று வெள்ளிக்கிழமை (23) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மே மாதம் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7 ஆவது பிரிவின் பிரகாரம் ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது.

ரத்நாயக்க மற்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் மின்சாரக் கட்டணத் திருத்தம் மற்றும் மின்வெட்டு காலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பல வாக்குவாதங்கள் இடம்பெற்றதை அடுத்து இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours