(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிசாரின் வருடாந்த அணிவகுப்பு பரிசோதனையும் ஆய்வு அறிக்கை பரிசோதனை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்  பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார ஒழுங்கமைப்பில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரி மான தலைமையில் வெபர் மைதானத்தில்  இன்று சனிக்கிழமை (24) திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிகாரியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அத்தியட்சகர் யூ. என் பி .லியனகே கலந்துகொண்டு பொலிசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு  சோதனையிட்டார்.

அதனை தொடர்ந்து  தலைமையக பொலிஸ் நிலையத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பூங்கா நாடவெட்டி திறந்துவைத்து பொலிஸ் கொடியை ஏற்றி அங்கு கட்டிடம் மற்றும் பொலிஸ் பிரிவு நிலையங்கள் பரிசோதனை செய்தார்

இதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்  ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண  சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நான்கு வருடங்கள் பின்னர் இந்த பொலிசாரின் வருடாந்த அணிவகுப்பு பரிசோதனையும் ஆய்வு அறிக்கை பரிசோதனையும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours