வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
போக்குவரத்து மற்றும் தபால் அமைச்சர் பந்துல குணவர்தனவை கிழக்கு மாகாண ஆளுநர் சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடல் இல்லத்தில் மேற்கொண்டதாக கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்..
தபால் சேவையில் நியமனம் பெற்ற பெருந்தோட்ட இளைஞர்களின் அடிப்படை சம்பள விகிதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க கவனம் செலுத்துமாறு கௌரவ அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்.
அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு மாண்புமிகு அமைச்சர் முன்னுரிமையின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒப்புக்கொண்டதுடன், அவரது வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் என்னிடம் கையளித்தார்.


Post A Comment:
0 comments so far,add yours