(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு  இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் தெய்வசக்திக்கு  பிரசித்திபெற்ற மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (11)திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.

இவ்வாலயத்தில் தொடர்ச்சியாக பகல்,இரவு பூஜைகள் இடம்பெற்றுள்ளது.தீமிக்கும் அடியார்கள்,வேதாதிகள் நோற்புநூல் கட்டியதுடன் நேற்றையதினம் (16)தீ மிதிப்பு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் தமது நேர்த்தி கடனை நிறைவேற்றும் பொருட்டு   பக்தி பரவசத்துடன் தீ மிதிப்பு நிகழ்வில்  கலந்துகொண்டனர்










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours