இம்முறை
எதிர்வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் காட்டில் கதிர்காம பாதயாத்திரை
செல்லும் அடியார்களுக்கு சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு
சிவசங்கர் ஜி ஓர் அன்பான அறிவிப்பை விடுத்துள்ளார்.
அவரது அறிவிப்பில்..
கதிர்காம பாதை திறக்கும்போது யாத்திரை செல்லும்
அடியார்கள் பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பொலித்தீன் கொண்டு செல்வதை
தவிருங்கள். மீறி தேவை ஏற்படுத்தி கொண்டு வரும் சமயத்தில் அந்த அந்த
இடத்திலேயே குப்பைகளை எரித்து விடுங்கள். இன்னும் எத்தனையோ வருடங்களுக்கு
எமது உறவுகள்தான் அடியார்களாக செல்லப் போகின்றார்கள். அவர்களுக்கும் நாம்
செய்வதை சொல்லிவிட்டால் அவர்களும் அதனை பின் தொடர்வார்கள்....
எமது
நாடு, எமது பாரம்பரிய தெய்வீக சித்தர்கள் ரிஷிகள் உலா வரும் இடம்.
யாத்திரை எப்போது தொடங்கியது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. தொடர்ந்து
செல்கின்றோம். முருகனின் அருள் மட்டுமல்ல, அதிசயங்களும் நிறைந்த புண்ணிய
பூமி. எவ்வளவோ நேர்த்திகள். அவ்வளவிற்கும் அங்குள்ள தெய்வங்களின்
அருளாசிகள். காணக்கிடைக்காத அற்புதங்கள். வருகின்றவர்களின் எண்ணங்களை,
கஷ்டங்களை நிறைவேற்றும் புண்ணிய தலத்தினை கண்குளிர கண்டு விடைபெறும்
அமைதியே அமைதி.
ஒரு வருடத்தில்
ஒருமுறைதான் வருவதுண்டு. அதனை நாமே சரியான பாதையில் ஒழுக்கநெறி தவறாது
கடைப்பிடித்து செயற்பட்டால் இனிவரும் சந்ததியினரும் வழி தவறாது
செயற்படுவார்கள்.
இவ்வாறு குறிப்பிடுகிறார்.

Post A Comment:
0 comments so far,add yours