( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு  நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் புதிய பரிபாலன சபை தெரியும் கூட்டம் நேற்று (9) வெள்ளிக்கிழமை லாகுகலை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா தலைமையில் நடைபெற்ற இவ் விசேட கூட்டத்தில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அதிதியாக கலந்து கொண்டார்.
உகந்த மலை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் பாணமை விகாராதிபதி மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
களுவாஞ்சிக்குடி முதல் பாணமை வரையுள்ள இந்து பக்தர்கள் கலந்து கொள்ளமுடியும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் சுமார் ஆயிரம் பக்தர்கள் வாகனங்களில் காலையில் வந்து சேர்ந்தனர்.
முதலில் ஆலய பரிபாலன சபை மற்றும் உறுப்பினர்களின் பணிகள் கடமைகள் பற்றி பிரதேச செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours