இ.சுதா
பட்டிருப்பு
கல்வி வலய பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் முதல்வர்
சித்திரவேல் சசிதரன் அவர்கள் இன்றைய தினம் இடமாற்றம் பெற்று
கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் அதிபராக தனது கடமையினை பொறுப்பேற்றுக்
கொண்டார்.
அதிபர் தரம் 1ஐச்
சேர்ந்த இவர் சிறந்த நிர்வாகி மாத்திரல்லாது மும்மொழித் தேர்ச்சி பெற்றவர்
தான் கடமையாற்றிய பாடசாலைகளில் காத்திரமான முறையில்
சேவையாற்றியிருந்தார்.இவருடைய சேவையினைப் பாராட்டும் நோக்கில்
மட்/பட்/உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் ,கல்வி
சாரா ஊழியர்கள், பெற்றோர் இணைத்து பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து
வழி அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
பதிவியேற்றல்
நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பெருமதிப்புக்குரிய
எஸ்.சிறிதரன் உட்பட பாடசாலைச் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours