( அஸ்ஹர் இப்றாஹிம்)


கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினதும், வலய கல்வி அலுவலகங்களினதும் அனுசரணையில் இம்மாதம் 22,23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, கல்லடி,சண்ஸைன்  உல்லாச விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள Education Srilanka-2023, Eastern expo உயர்கல்வி கண்காட்சிக்கு  கிழக்கு மாகாணத்திலுள்ள  உயர்கல்வியினை தொடரவுள்ள மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கலந்து பயன்பெறுமாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி.ஏ.கனகசூரியம் தெரிவித்துள்ளார். 

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாத, சித்தியடைந்த, உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்த, மற்றும் உயர்கல்வியினை தொடரவுள்ள சகல மாணவர்களுக்கும் தமது கல்வி தரத்தினை அதிகரிப்பதற்கான வழிகாட்டல் ஆலோசனைகள் இக் கண்காட்சியின் போது வழங்கப்படவுள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours