கல்வி அமைச்சு நடத்திய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் 10 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கின்றது.
இப்
பரீட்சை அண்மையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது. பரீட்சையில்
வெற்றிகரமாக சித்தி அடையும்மாணவர்கள் வெளிநாட்டு பயிற்சிக்கு அழைத்துச்
செல்லப்படுவது வழமை.
இம்முறை இடம் பெற்ற பரீட்சையில் பத்து மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிரிவு ஒன்று.
எஸ் அத்துகோரல கொழும்பு ஆனந்த கல்லூரி -6- 70புள்ளிகள்
டி.எஸ்.பிரித்திக்ஷி சென்மேரிஸ் கல்லூரி திருகோணமலை -6- 60 புள்ளிகள்
ஜி .அஸ்வின் திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -6- 57
பிரிவு இரண்டு.
ஆர். ஆரூரன் அளவெட்டி அருணோதயா கல்லூரி -8- 50புள்ளிகள்
எஸ்.நிஜோதிகா விபுலானந்தா மத்திய கல்லூரி மல்வத்தை-8-45 புள்ளிகள்
ஜி.ரத்நாயக பதுளை மத்திய கல்லூரி-9- 45 புள்ளிகள்
பிரிவு மூன்று.
ஏ .அஹமட் இரத்னபுரி சிவாலி மகா வித்தியாலயம் -11- 78
ஜே.லவீந் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் -10- 78 புள்ளிகள்
ஜி .சாந்தித்யன் சாவகச்சேரி இந்து கல்லூரி -9-76 புள்ளிகள்
எஸ். கலாபன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி -11- 76 புள்ளிகள்.
இந்த
பத்து மாணவர்களுள் ஏழு மாணவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்
மாணவர்கள் ஆவர். வடக்கிலிருந்து நால்வரும் கிழக்கிலிருந்து மூவரும்
தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours