மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள் கடந்த வாரம் கம்பளை வீகுலுவத்த மற்றும் கம்பளை ஸாஹிராக் கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றது.
போட்டி நிகழ்ச்சிகளில் 16 வயதிற்குட்பட்ட போட்டியில் களுகமுவ மத்திய கல்லூரி சம்பியன்களாகவும் கண்டி திருத்துவக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் களுகமுவ மத்திய கல்லூரி சம்பியன்களாகவும், கொட்டகல தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், 20 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் கம்பளை ஸாஹிராக் கல்லூரி சம்பியன்களாகவும், கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
Post A Comment:
0 comments so far,add yours