நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகத்திற்கும் மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான சினேகபூர்வ கடினபந்து கிறிக்கட் போட்டியொன்று அண்மையில் நிந்நவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நிந்தவூர் எமரெல்ட் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 17 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சிஜாம் 51 ஓட்டங்களையும், அஜ்மல் 24 ஓட்டங்களையும் பெற்றதுடன், பந்து வீச்சில் அம்ஜத் 3 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், இன்ஸமாம் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டையும்
, அஸ்ஹான் 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாவடி பேர்ல்ஸ் விளையாட்டுக் கழகம் 17 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
Post A Comment:
0 comments so far,add yours