( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில்
பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும் இலங்கை பொலிஸ்
திணைக்களத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட்டுமான கிருஸ்ணபிள்ளை
விஜிதாவின் "புதுவரவு " எனும் சிறுவர் பாடல் நூல் கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமானிடம்
வழங்கி வைக்கப்பட்டது.
திருக்கோவில்
சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆலயபரிபாலன சபையின் தலைவர்
சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் இந் நூல் ஆளுநர் செந்தில் தொண்டமானிடம்
வழங்கி வைக்கப்பட்டது.
அங்கு
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பொதுச்செயலாளர் கலாநிதி எம்.
கோபாலரெத்தினம் ,கிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளர் ச. நவநீதன்,
திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன், கல்முனை வடக்கு பிரதேச
செயலாளர் ஜே.அதிசயராஜ், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.
குணபாலன், திருக்கோவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஐ.கமல்ராஜ் உள்ளிட்ட
பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours