(எம்.எம்.றம்ஸீன்)
கிளிநொச்சி மக்கள் அமைப்பின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடாத்திய அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான மாவட்ட ரீதியான காற்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் வலைப்பாடு மெசியா அணி கிளிநொச்சி மாவட்டத்தில் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான நாச்சிக்குடா சென் மேரிஸ் அணியுடன் மோதியது.
மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோலினைப் பெற்றன. பின்னர் வெற்றி அணியை தீர்மானிக்கும் (தண்டனை உதை) சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. அதில் 4:3 என்ற கோல்கள் கணக்கில் மெசியா விளையாட்டு கழக அணி வெற்றி பெற்று சம்பியனாகியது.
போட்டியின் சிறப்பு ஆட்ட நாயகனாக மெசியா அணியின் மேரியஸ் தெரிவானார்.
Post A Comment:
0 comments so far,add yours