கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்களம்) போட்டி நிகழ்ச்சிகள் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பாக தரம் 06 தொடக்கம் 09 பிரிவு வரையான மாணவிகள் பேச்சு, வாசிப்பு,
மொழிப்பிரயோகமும் கிரகித்தலும், நாட்டார் பாடல்கள் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று முதலாம், இரண்டாம் நிலைகளை பெற்று 14 க்கும் மேற்பட்ட மாணவிகள் கிழக்கு மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்களம்) போட்டி நிகழ்ச்சிக்கு தெரிவு செய்யப்பட்டு வரலாறு சாதனை படைத்துள்ளனர்.
தரம் 9 பேச்சுப் போட்டியில் எம்.ஐ.எப். இஸ்மா , தரம் 7 மொழிப்பிரயோகமும் கிரகித்தலும் போட்டியில் எம்.ஏ.ஆஸிமா சயிரத், நாட்டார் பாடல் குழு நிகழ்ச்சியில் என்.எப்.நஹ்லா, என்.உமைசா சுப்றா, எஸ்.யூ.எப்.சக்காபா, எஸ்.எப்.சனாரி, ஏ.எச்.எப்.சுலைஹா, என்.யூ.இமானி, எம்.எப்.எப்.நிதா, ஆர்.எப்.சபா ஆகியோர் முதலாம் இடத்தையும், வாசிப்பு போட்டியில் தரம் 7 ஜே.ஜே.சுமையா, தரம் 9 கே.ஆயிஷா ஹனீன், தரம் 6 எம்.எப்.எப்.அம்னா , தரம் 7 ஆர்.செயினப் சுஹா ஆகியோர்இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு உற்சாகமளிக்கும் நோக்குடன் குறித்த மாணவிகளை அதிபர் அலுவலகத்துக்கு நேரடியாக அழைத்து கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம். அமீன் அவர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
கல்முனை வலய மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்களம்) போட்டி நிகழ்ச்சிக்கு மாணவிகளை திறம்படவழிப்படுத்திய
சிங்கள பாட இணைப்பாளர் ஏ.எம். நெளஷத், சிங்கள பாட ஆசிரியர்களான ஏ.எம்.எம். அனீஸ், எம்.ஐ.எப். பாத்திமா சபானா மற்றும் சாதனை படைத்த மாணவிகளுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் யூ.எல்.எம். அமீன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை கலந்து சிறப்பித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours