(கனகராசா சரவணன்)



13 திருத்த சட்டம் மாகாணங்களுக்கான அதிகாரங்களை பரவலாக்குவதற்கு நிபுணர்கள் குழுவை ஜனாதிபதி நியமிப்பது என்பது இந்த நாட்டு மக்களையும் இந்தியா உட்பட  சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகமாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உருவாகிய 13 வது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு 36 வருடம் கடந்திருந்தாலும் இலங்கை அரசியல் அமைப்பில் இருக்கும் ஒரு அங்கமான இந்த 13 திருத்தசட்டம் இன்னும் மழுமையாக அமுல்படுத்தப்படவில்லை

இந்த நாட்டை மாறி மாநி ஆட்சிசெய்து கொண்டிருக்கும் அரசாங்கள் கட்சிகளும் இலங்கை அரசியல் அமைப்பை மீறிக் கொண்டிருக்கின்ற ஒரு சட்டவிரோதமான நடவடிக்கையை செய்து கொண்டிருக்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு 13 திருத்த சட்டத்தை கொண்டுவந்து பாராளுமன்ற அனுமதியை பெறவேண்டும் என கூறகின்றார்

உண்மையிலே 1987 ஆம் ஆண்டு அப்போதைய எதிர்கட்சி தலைவர் தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் அப்பாத்துரை அமிர்தலிங்கத்டதுடன் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருக்காத நிலையில் ஒட்டுமொத்த சிங்களமக்களின் பிரதிநிதிகளினால் 6 இல் 5 பெரும்பான்மையைக் கொண்டு பெரும்பான்மையக நிறைவேற்றப்பட்ட 13 திருத்த சட்டத்தை மீண்டும் ஒருதடவை  பாராளுமன்றம் கொண்டுபொக வேண்டிய தேவை இருக்காது

இந்த நிலையில் இந்த 13 திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து  சிங்கள மக்கள் மத்தியில் செல்லா காசுகளாக இருந்த அரசியல் வாதிகளை தட்டியொழுப்பி இனங்களுக்கிடையே மீண்டும் ஒரு இனகலவரத்தை உருவாக்கும் இந்த நிலையை ஜனாதிபதி கொண்டுவந்திருக்கின்றார்

13 திருத்த சட்டத்திற்கு ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாணசபை தேர்தலை நீண்ட காலமாக நடாத்தாமல் இழுத்தடிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் தங்களை ஆளக்கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் அது தான் ஜனநாயகம் ஆனால் மாகாணசபை தேர்தலை நடாத்தாமல் மாகாணசபைகளுக்கு நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார் அதற்கு ஒத்துழைப்பதற்காக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உட்பட சில கட்சிகள் ஜனாதிபதிக்கு ஒத்தாசை புரிகின்றது

மாகாணசபை நிபுணர்குழு என்பது மாகாணசபை தேர்தலை பின் போடுவதற்கான  தந்திரமே ஒழிய நிபுணர்குழு அமைப்பதால் எதுவுமே சாதித்துவிட முடியாது மாகாணங்களுக்கும் மத்திக்கும் இடையே இருக்கும் அதிகாரங்களை எப்படி பகிர்வது என்பது பற்றி கண்டறிவதங்கான இந்த குழு அமைக்கப்படவுள்ளது

எப்படி பகிரவேண்டும் என்பது 13 திருத்த சட்டத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது குறிப்பாக பொலிஸ் அதிகாரம் தொடர்பாக சுத்தமாக கூறப்பட்டுள்ளது மாகாண பொலிஸ் ஆணைக்குழுவும் மத்திய பொலிஸ் ஆணைக்குழுவும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 3 பேர் இருப்பார்கள் என்று ஆனால் சிலருக்கு வரலாறு தெரியாது

1988 ம் ஆண்டு இறுதியிலே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபைக்கு டி.ஜ.ஜி ஆனந்தராஜாவை அப்தோதைய ஜனாதிபதி பிரேமதாஸா நியமத்து அவரின் கீழ் 3 ஆயிரம் பொலிசார் நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு  பயிற்சியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது எனவே பொலிஸ் அதிகாரம் 13 திருத்தத்தில் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்டிருப்பது தான் என்பது உண்மை

அந்த வகையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதற்கு நிபுணர்கள் குழுவை ஜனாதிபதி நியமிப்பது என்பது இந்த நாட்டு மக்களையும் இந்தியா உட்பட  சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே பார்க்கின்றேன்

இன்று குருந்தூர் மலையில் தொல் பொருள் திணைக்களம் இந்து கோயில் பூஜை வழிபாடு செய்ய விடாது அங்கு விகாரை அமைத்துள்ளனர் பொங்கல் செய்ய இந்துக்கள் செல்லுகின்றனர் அங்கு அதை தடுக்க இனவாத அரசியல் வாதியான உதயகம்பன்வெல உட்பட பௌத்த தேரர்கள் செல்லுகின்றனர் இவைகளை யெல்லாம்  ஜனாதிபதி  தூண்டிவிட்டு புதினம் பார்கின்றார்

ஒரு சர்வ நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியாக இருந்துகொண்டு பொருளாதார பிரச்சனைக்கு மாத்திரமல்ல புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை காண வழிகோல வேண்டும்  என்றார்.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours