இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157  வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் சம்மாந்துறை சென்னல் கிராமம்கிராம சேவையாளர் பிரிவில்  அமைந்துள்ள மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வுகள் இன்று (3) இடம்பெற்றது.


சம்மாந்துறை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே டி எச் ஜெயலத் தலைமையிலும்சம்மாந்துறை பொலிஸ் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி  பொலிஸ்  பரிசோதகர்  ஜி ஆர்தர்மரத்ன சம்மாந்துறை சென்னல் கிராம 1 கிராம சேவையாளர் .எல் எம் ஒஜிஸ்கான்,  ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில்  ஆயுள்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எம் எம் றிஸ்கா,சென்னல் கிராம் 1 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தகர் .எல் நஸீர்,சென்னல் கிராம 1 சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர் மற்றும் குழுவினரது பூரண ஒத்துழைப்போடு சம்மாந்துறை  பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள்  ஆகியோர் கலந்துகொண்டு   சிரமதானம்  செய்யும் பணியில் ஈடுபட்டதோடு மரக்கன்றுகளும் நடப்பட்டன.சிரமதான நிகழ்வுக்கு ஒத்துழைப்பு

வழங்கிய அனைவருக்கும் சம்மாந்துறை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கே.டி.எச் ஜெயலத் நன்றியினை தெரிவித்தார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours