நூருல் ஹுதா உமர்
மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக, மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம் எனும் நோக்குடன் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழகத்துடனான கலந்துரையாடல், பர்வின் டிரேடிங் மற்றும் லதான் அக்ரோ இன்டர்நேஷனல் நிறுவன பணிப்பாளர் அல் ஹாஜ் கலில் முஸ்தபா அவர்களுடன் மருதமுனை முஸ்தபா கம்லக்ஸ் நிறுவன காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஒலிம்பிக் விளையாட்டு கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் ஒலிம்பிக் விளையாட்டு கழக வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours