(கனகராசா சரவணன்)


ஈஸ்ரர் குண்டு வெடிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என தெரிவிக்கும் சரத்பொன்சேக்கா 2009 ம் ஒரு இலச்சத்து 50 ஆயித்துக்கு மேற்பட்ட மக்கள் இறக்கும் போது அவர் இராணுத் தளபதியாக இருந்தவர். எனவே அவர் அவர்களுக்கு என்ன நடந்தது என பதில் கூறவேண்டும் அல்லது அவர் மீதும்  2009 வரை வடகிழக்கில் இடம்பெற்ற தமிழர் மீதான படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என நா.ம. உறுப்பினர் கோ. கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிகரையிலுள் நா.மன்ற உறுப்பினரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பேசும் பொருளாக இருக்கும் ஈஸ்ரர் குண்டுதாக்குதலுடன் சம்மந்தப்பட்வர்கள் தொடர்பாக பிரித்தானியாவில் இருந்து  சனல் 4 ஊடகம் ஆவணம் வெளியிட்டுள்ளது.  

இலங்கையில் இந்த சம்பவம் பலரது உண்மை முகத்தை மக்களுக்கு தெரியபடுத்தியுள்ளது அந்தவகையில் ஈஸ்ரர் குண்டுவெடிப்புக்கான சூத்திரதாரிகள் யார் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்த குண்டு வெடிப்பிலே மட்டக்களப்பில் 31 பேரும் மற்றும் 40 வெளிநாட்டவர்கள் உட்பட  250 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உண்மைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியமானவரும் ஊடக பேச்சாளருமாக கடந்த காலத்தில் செயற்பட்டு வந்த ஆசாத் மௌலான வெளிநாட்டில் தஞ்சமைந்து வெளி படுத்தியுள்ளார்.

இந்து குண்டு வெடிப்பில் நியாயம் கோரி இன்று சர்வதேச விசாரணை வேண்டும் என பேராயர் ரஞ்சித் மல்கம். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா, சரத்பொன்சேக்கா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மற்றும் அரசியல் கட்சிகள்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நாட்டிலே உள்நாட்டு விசாரணைக்கு எந்த விதமான நம்பிக்கையும் இல்லை என்பது இவர்களுக்கு தெரியும். ஏன் என்றால் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு பொறுப்பாக இருந்து விசாரணை  செய்து கொண்டிருந்தவர் 2019ம் ஆண்டு கோட்பாய ஜனாதிபதியாக வந்ததும் அவர் இந்த நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.

கோட்பாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவரையம் விசாரணைக்கு அழைத்த அவர் தனது உயிருக்கு உத்தரவாம் இருக்கர் என்ற காரணத்தால் அவர் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ள அவரும்  பல உண்மைகளை கூறிவருகின்றார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் குற்றம்; செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் த.ம.வி.புலிகள் கட்சியினர் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என கோஷம் எழுப்பி இன்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் எனவே இந்த சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை கொடுக்கவேண்டும்

ஆசாத் மௌலான கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்காக த.ம.வி.புலிகள் கட்சி தலைவர் அதன் உறுப்பினர்களையும் பாவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் எனவே அவர்களுடன் இருந்து செயற்பட்ட மௌலானா கூட ஒரு குறறவாளியாக கருதப்படுவார்.

சர்வதேச விசாரணை என்று கேட்பவர்கள் அரசியல் ரீதியாக தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்கா இந்த குண்டு வெடிப்பையும் மக்களது உயிர்களை வைத்து அரசியல் சித்து விளையாட்டு காட்டாமல் இந்த நாட்டிலே 2009 வரை கொல்லப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட அத்தனை உயிர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்

அது மாத்திரமல்ல கொக்கு தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்படும் உடல்கள் யுத்த இறுதிகட்டத்தில் சரணடைந்தவர்களது உடல்களாக இருக்க கூடும் எனவே அனைத்து படுகொலைகளுக்கும் சர்வதேச விசாரணை வேண்டும்

2022 நாட்டில் அறக்களை ஊடகா ஆட்சி மாற்றம் இடம்பெற்றது இந்த நிலையில் அந்த போராட்டக்காரர்களை இப்போது தேடி தேடி கைது செய்யும் இந்த அரசாங்கம் ஈஸ்ரர் குண்டு வெடிப்புடன் சம்மந்தபட்வர்கள் என கூறப்படுபவர்களை அந்த நேரத்தில் கைது செய்திருந்தால்  இந்த நிலமை வந்திருக்காது

ஈஸ்ரர் குண்டுதாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடியில் பரீட்சாத்தமாக மோட்டர்சைக்கிள் குண்டுதாக்குதல் நடாத்தியதில் ஸாரானின் சகோதரன் காயமடைந்தார் அவரை கைது செய்யவில்லை வவுணதீவில் இரு பொலிசார் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும்; கொல்லப்பட்டு அவர்களது  ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்களை தேடிக்கண்டுபிடிக்காத அந்த அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.

2019 ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்காக இந்த அத்தனை உயிர்களையும் பறிகொடுத்து இரத்த கறையுடன் அந்த ஆட்சிக்கு வந்த கோடபாய ராஜபக்ஷ 2 வருடம் கடந்த நிலையில் இருப்பதற்கு இடமில்லால் துரத்தியடிக்கப்பட்டிருந்தார் அந்த வகையில் இந்த நாட்டில் நீதிதுறை எப்படி இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்க வேண்டும.

இந்த குண்டு வெடிப்புக்கு திட்டங்கள் சிறைச்சாலையில் தீட்டப்பட்டுள்ளது எனவே இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணை ஊடாக கண்டுபிடித்து சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவது மாத்திரமல்ல வடகிழக்கில் இடம்பெற்ற அநியாயங்களுக்கும் கொலை, கடத்தலுகளுக்கு ஒரு நியாயம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்றர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours