(எம்.எம்.றம்ஸீன்)

   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ,பிரதிப் பணிப்பாளர், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி,  உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெறும் பீ.எஸ்.எஸ்.பீ செயற்றிட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களினால்  கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்

 குறித்த கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்திய மருந்து விநியோகப் பிரிவினை குறித்த வைத்தியசாலைக்கு இடம் மாற்றுவதனை துரிதப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களிடமும் தமது பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் வைத்தியசாலையிலிலுள்ள உபகரணங்களின் நிலைமை மற்றும் பாவனைக்குட்படுத்தப்படும் நடைமுறைகள் தொடர்பிலும் நேரடி அவதானம் செலுத்தப்பட்டது

குறித்த விஜயத்தின்போது கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளையும் சிபாரிசுகளையும் விரைவில் செய்வதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதுடன் இதனை விரைவுபடுத்துமாறும் பணிப்பாளர் குறித்த குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்தார்க

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours