( கல்முனை நிருபர்)
கல்முனைப் பிரதேச செயகத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வலயத்தில் பிரிவுக்கு பொறுப்பான உத்தியோகத்தராக கடமையாற்றிய எம்.ஜெமீல் அவர்கள் தனது 57 வயதில் 27 வருடங்கள் சேவையின் பின்னர் முன் ஓய்வு நிலை அடைந்தார். இவரின் அர்ப்பணிப்பு சமுர்த்தி சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக கல்முனை பிரதேச செயலகத்தில் பிரியாவிடை நிகழ்வுசிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்தலைமையில்(19) செவ்வாய்க்கிழமையன்று கல்முனையில் இடம்பெற்றது.
அனைத்து உத்தியோகத்தர்களும் அவரது அர்ப்பணிப்பான சேவைக்காக அவருக்கு பொன்னாடை போற்றி பொற்கிழி மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் மேலும் சமூர்த்தி சேவையில் இவரது திறன் மிக்க அர்ப்பணிப்புகள் மற்றும் ஓய்வுநிலை வாழ்வு சிறப்புற வேண்டுமெனவும் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்வின் விஷேட அம்சமாக தனது 27 வருட சேவையில் சிறந்த முறையில் நெறிப்படுத்தி வழிகாட்டிய மேலதிகாரிகளுக்கு ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.ஜெமீல் அவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம் எஸ்.எம்.சப்றாஸ் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களும்,கணக்காளர் எம்.அமீரலி அவர்களும் மற்றும் சிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்கள் உட்பட பிரதேச செயலக சகல சமுர்த்தி முகாமையாளர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், அவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours