(கல்முனை நிருபர்) 

 அம்பாறை மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பதில் சமுர்த்தி பணிப்பாளர் கடமைக்காக அலுவலக விஜயத்தினை (15)வெள்ளிக்கிழமை மேற்கொண்டு இருந்தார். 

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கினை நடத்தியிருந்தார். (16)சனிக்கிழமை அன்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுகளில் காணப்படுகின்ற முயற்சியான்மை பயனாளிகளின் வாழ்வாதார வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக கள விஜயம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார். 

 இதன்போது ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் கே.நவரஞ்சன் அவர்களும் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எம்.புவிராஜ் அவர்களும் அரையம்பதி வங்கி வலய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது முயற்சியான்மை பயனாளிகளுக்கு பலதரப்பட்ட விளக்கங்களும் தெளிவூட்டல்களும் தங்களுடைய தொழில்சார் நடத்தைகள் தொடர்பாகவும் கணக்கு வைப்புக்கள் தொடர்பாகவும் மக்களுக்கும் சமுர்த்தி வங்கிகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகள் போன்றவற்றினையும் விளக்கி இருந்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours