( வி.ரி. சகாதேவராஜா)

 மட்டக்களப்பு ஆசிரியர்  கலாசாலையின் 1991 /1992  நண்பர்கள், அவர்களது புலன அணியின் தலைவர் வி.ரி.சகாதேவராஜாவின் 59 ஆவது அகவையை அவரது காரைதீவு இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினர்.

முன்னதாக காலையில் ஆச்சரியமாக சிவப்பு ரோஜா பூச்செண்டு கிடைக்கப்பெற்றது. 

31 வருடங்களுக்கு பின்னர்  இடம்பெற்ற இச் சிறப்பு நிகழ்வு
புலன அணியின் பிரதித் தலைவர் கவிமாமணி எஸ்.புண்ணியமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (28) வியாழக்கிழமை நடைபெற்றது.

 நிகழ்வில், மட்டக்களப்பு தொடக்கம் திருக்கோவில் வரையிலான 21 நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

விசேட அதிதியாக பிரபல சமூக செயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அதிபர் எஸ்.பேரின்பராசாவும்  கலந்து சிறப்பித்தார்.

பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது.
நண்பர்கள் பிறந்த நாள் கொண்டாடும் சகா பற்றி உரையாற்றினார்கள்.

 அருட்கவியரசு ஆ.புட்கரன் வீ.செம்பொற்சோதி ஆகியோர் பாடல் பாடி மகிழ்வித்தனர்.
 பொன்னாடை போர்த்தி லண்டன் நண்டு நடா மற்றும் நண்பர்களின் அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன. விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.

அணியின் புலம்பெயர் நண்பர்களான நடா( லண்டன்), கலா( ஜேர்மனி), ரவி( அவுஸ்திரேலியா) ஆகியோர் நேரடி நிகழ்வில் வாழ்த்து தெரிவித்தனர்.

அறுபதாவது அகவையை நூல் வெளியிட்டு பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்று நண்பர்கள் கருத்து தெரிவித்தனர்.
இறுதியில் சகா ஏற்புரையாற்றினார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours