நூருல் ஹுதா உமர்.

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் புனித பிறந்த தின மீலாத்தை முன்னிட்டு 2023.09.28,29 ம் திகதி புத்தளம் கல்பிட்டி (பெறியசந்தி கிராமம்) அல் மத்ரஸதுல் ஹத்தாகியா மற்றும் ஹிழ்ர் மகாம் அமைப்பின் குர்ஆன் மற்றும் ஹிப்ழ் மாணவர்களின் இஸ்லாமிய பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றது.

இன் நிகழ்வானது வருடா வருடம் இஸ்லாமிய மாதமான புனித ரபிஉனில் அவ்வழ் மாதம் பிறை 01ல் புனித கொடியேற்றப்பட்டு அம் மாதம் பிறை 12ல் புனித கொடி இறக்கி வைக்கப்பட்டு இன, மத, பேதம் கடந்து மூவின மக்களுக்கும் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்படும்.

இந்தவருடமும் மாணவர்களுடைய இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வுகள் அல் மதரஸதுல் ஹத்தாகியா மற்றும் ஹிழ்ர் மகாம் அமைப்பின் தலைவர் கண்ணியத்திற்கும், மதிப்பிற்கும் உரிய அஷ்ஷேஹ் அஸ்செய்யது முபாறக் மெளலானா (அல்-ஷிஸ்தி,அல்-ஹத்தாகி, அர்ரிபாயி, சல்லமல்லஹு வஜிஹஹு) தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் அஸ்செய்யது றஹ்மதுள்ளாஹ் மெளலான (ஸஃதி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours