(எம்.எம்.ஜெஸ்மின்)
மாணவர்களிடையே நல்லொழுக்கத்தையும்,கடமையுணர்ச் சியையும், தலைமைத்துவ பண்புகளையும் வளர்த்து சமூகத்திற் கேற்ற நல்ல பிரஜைகளை உருவாக்கும் நோக்கோடு கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் சாரணர்களுக்கான 03 நாள் பாசறை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், சாரண பொறுப்பாசிரியர் கே.எம். தமீம் அவர்களின் வழிநடத்தலில் சாரணர்களுக்காக போக்குவரத்து சமிக்ஞைகள், திசைகாட்டி வரைபடம், துணிகர செயற்பாடுகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் சம்பந்தமான விரிவுரை, தீப்பாசறை போன்ற பல செயற்பாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours