நேற்று நள்ளிரவு (31.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
விலை விபரங்கள்
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 417 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 341 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 231 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள விலைகளுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours