(, வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி மாணவர்கள் நேற்று முன்தினம் (24) ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டிருந்தனர்.
மொன்டிசோரி பணிப்பாளர் ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்கள் மாணவர்கள் இச்சுற்றுலாவில் பங்கேற்றனர்.
இவர்கள்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்
சிறுவர் ஆச்சிரமம் பாசிக்குடா சிறுவர் பூங்கா கலங்கரை விளக்கம்
படகுச்சவாரியில் தனித்தீவு போன்ற இடங்களுக்கு விஜயம் செய்தனர்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தலைவர் ரி.மேகராசா முன்னாள் தவிசாளர் சிவஞானம் அகிலேஷ்வரன் ஆகியோர் மாணவர்களை வரவேற்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours