நூருல் ஹுதா உமர்
சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட காயங்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பான முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்கின்ற சுகாதார நிறுவனங்களுக்கான தரக்கணிப்பீடுகளில் அமைச்சின் தொடர்ந்தேர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் மேற்பார்வைகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்று வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டு தகுதி சான்றிதழ்களை இன்று 2023.09.19ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மாற்றீடு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் வீ அல்விஸ் அவர்களும் தேசிய தொற்றநோய் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சமித் டி சமரக்கோன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்
தொற்றாநோய் பிரிவின் தேசிய காய தடுக்கும் கண்காணிப்பு செயல்முறையின் கீழ் 2022 ஆம் ஆண்டின் மாவட்ட மற்றும் மாகாண நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட சிறந்த செயல்திறனுக்கான தேசிய மதிப்பாய்வு விருது வழங்கும் விழாவின் போது மேற்படி சிறந்த செயல்திறன் தகுதி சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த புறக்கணிப்பீடு முறைமையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை முதலாம் இடத்தையும் கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்ப் பிரிவு இரண்டாம் இடத்தையும் பெற்று பிராந்தியத்திற்கு பெருமை சேர்த்துள்ளன
இதற்கு அமைவாக தேசிய ரீதியாக நடைபெற்ற கணிப்பீடு ஒன்றில் ஒன்றில் முதலாம் இரண்டாம் இடத்தைப் பெற்ற நிறுவனங்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்டவை என்ற காரணத்தினால் தான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த சகலருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்கள் தெரிவித்தார்
இதற்கமைவாக சிறந்த ஒருங்கிணைப்புகளை வழங்கிய சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் ஹனிபா அவர்களுக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்ப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.எஸ். இர்சாத் அவர்களுக்கும் விசேடமான நன்றிகளை பணிப்பாளர் தெரிவித்துக் கொண்டார்
Post A Comment:
0 comments so far,add yours