( வி.ரி சகாதேவராஜா)
 
திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான கடலரிப்பை அடுத்து தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஸ்தாபகர் அமரர் தம்பையா சுவாமிகளின் சமாதி ஆலயம் காவு கொள்ளப்படும் ஆபத்தை எதிர் நோக்கி இருக்கின்றது .

அந்த பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பில், இதுவரை சுமார் 200 தென்னை மரங்கள் மற்றும் 12 கிணறுகள் இதுவரை கடலரிப்பால் கொள்ளப்பட்டிருக்கின்றன.

கடந்த சில நாட்களாக அங்கு இடம் பெறுகின்ற மோசமான கடலரிப்பால் தம்பையா சமாதி ஆலயமும் கடலுக்குள் காவு கொள்ளப்படும் பாரிய அபாயம் நிலவியதை குருகுலப் பணிப்பாளர் கண.இராஜரத்தினம் அறிந்து உடனடியாக பிரதேச செயலாளருக்கும், கடலோர பாதுகாப்பு திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் கே
 துளசிதாசனுக்கும் அறிவித்தார் .

மாகாண பணிப்பாளர் எந்திரி கே.துளசிதாசன் உடனடியாக செயல்பட்டு 100 மண் மூடைகளை நேற்றைய தினம் அங்கு அடுக்குவதற்கு உத்தரவிட்டார் .

அதன்படி, அங்கு  கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரும் குருகுல இல்லமாணவர்களும் சிவதொண்டர் அணியும் அஜந்தன்  தலைமையில் சிறப்பாக செயற்பட்டு பாதுகாப்பு மண் மூடைகளை அடுக்கினார்கள்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours