(எஸ்.அஷ்ரப்கான்)
மாகாண
மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஒலுவில்
அல்-ஹம்றா மாணவர்கள் இருவரை ஊர்கூடி வரவேற்று பாராட்டிய நிகழ்வு ஒலுவிலில்
இன்று (27) இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு
பிரதம அதிதியாக அக்கரைப்பற்று கல்வி வலைய உடற்கல்வி உதவிக் கல்வி
பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல் அவர்களும், கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று கல்வி
வலைய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எச்.எம்.ஹம்மாத் ஆகியோரும் கலந்து
சிறப்பித்தனர்.
கந்தளாயில்
நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான 'மாகாண மட்ட மெய்வல்லுனர்
விளையாட்டுப் போட்டி - 2023' இல் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களான
எம்.ஏ.ஆர்.ஹாபீஸ் ரய்ஹான் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல்
போட்டியில் 01 ஆம் இடத்தை பெற்றதுடன், பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக
பெண்
மாணவி ஹிதாயத்துள்ளாஹ் லுபினா ஈட்டி எறிதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.
இம்
மாணவர்களையும், பயிற்றுவித்த பொறுப்பாசிரியர்களான ஏ.எம்.எம்.கியாஸ்,
ஆர்.நெளசாத் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் சஹி மற்றும்
அதிபர் அஷ்ஷேய்க் யு.கே. அப்துர் ரஹீம், பிரதி அதிபர் எம்.ஏ. கமறுன்நிஸா,
இம்மாணவர்களை ஊக்கப்படுத்திய இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர்
எம்.எச்.எம்.நஸீம், உதவி அதிபர் ஏ.ஜே.எம்.றினீஸ் ஆசிரியர்கள் ஆகியோரும்
இப்பாராட்டு நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours