( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
மாநகர் நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பிரதிஷ்டா மகா
கும்பாபிஷேகத்தின் ஓரங்கமாக நேற்று (7) வியாழக்கிழமை வேப்பஞ்சாறுடன்
எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
புதிய முறையில் வேப்பஞ்சாறு அம்மனுக்கு சாத்தும் நிகழ்வு காலை 7 மணி முதல் நிகழ்வு இடம் பெற்றது.
இங்குள்ள விசேஷம் என்னவென்றால் முதல் முறையாக எண்ணெய் காப்பாக அம்மனுக்கு வேப்பஞ்சாறு சாத்துவதாகும்.
இன்று 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.19 மணி முதல் 10.41மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில்
மகா கும்பாபிஷேகம் இடம் பெற இருக்கின்றது.
தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 20ஆம் தேதி 1008 சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகம் இடம்பெறும் .
Post A Comment:
0 comments so far,add yours