நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தேசிய தொழுநோய் தடுப்பு இயக்கம் மற்றும் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு என்பன இணைந்து தொழுநோய் ஒழிப்பு தொடர்பான விசேட கருத்தரங்கினை இன்று 2023.09.07 ஆம் திகதி கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையில் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தன
கல்முனை பிராந்திய தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். பஸால் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல்.எம் றிபாஸ், தேசிய தொழுநோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் டாக்டர் எம். பி. ஏ. வாஜித், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் டாக்டர் டிலினி விஜய சேகர, தோல்நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஐ.எல்.மாஹில் ஆகியோர் விசேட வளவாளர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர் அவர்கள் தமது குழுவினர் வைத்தியசாலைகளுக்கு மாத்திரமின்றி தனியார் சிகிச்சை நிலையங்கள், மத நிறுவனங்களுக்கும் சமூகமளித்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் விசேடமாக வெளி நோயாள பிரிவுகளில் இவ்வாறான செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாகவும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அனைத்து நிறுவனங்களுக்கும் விநியோகித்து வருவதாகவும் தொழுநோயை கல்முனை பிராந்தியத்திலிருந்து முற்றாக ஒழிப்பது தனது தலையாயக் கடமை என்றும் தெரிவித்திருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours