இலங்கைக்கு உல்லாசப் பிரயாணம் மேற்கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு யுவதியின் கையடக்க கணினி மற்றும்
கமரா அடங்கிய கைப்பை காலி நகரில் தனது காதலனுடன் சென்று கொண்டிருந்த போது நழுவி கீழே விழுந்திருந்தது.
கைப்பை தொலைந்த விடயமாக காலி கோட்டை சுற்றுலா பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பலனாக வலகந்துவ கொகோ கோலா சந்தியைச் சேர்ந்த தம்மிக்க என்ற யுவதி இக்கைப்பையை கண்டெடுத்துள்ளதாக தகவல் கிடைத்திருந்தது.
கண்டெடுக்கப்பட்ட கைப்பை உரிய ஜேர்மன் யுவதியிடம் காலி சுற்றுலா பொலிசில் வைத்து மீளகையளிக்கப்பட்டது.
ஜேர்மன் யுவதி கைப்பையை கண்டெடுப்பதில் சம்பந்தப்பட்ட சகலருக்கும் நன்றி தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours