எம்.ஏ.றமீஸ்)
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியின் போது வெற்றி பெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
அதிபர் ஏ.எச்.பௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது சாதனை மாணவர்கள் வீதி வழியாக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பேன்ற் வாத்திய இசை வழங்கி ஊர்வலமாய் அழைத்துச் செல்லப் பட்டனர்.
மாகாண மட்டத்தில் திறமை காட்டி சாதனை படைத்த மாணவர்கள், மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர்; இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின்போது அக்கரைப்பற்று கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல், ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், பிரதி அதிபர் எம்.இக்பால், உதவி அதிபர்களான ஏ.எல்.சம்சுல் பழீல், எம்.ஏ.நபீல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியின் போது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாகாண மட்டத்தில் புதிதாக நான்று போட்டிச் சாதனைகளை நிலை நாட்டியதுடன், கிழக்கு மாகாண மட்டத்தில் மொத்தப் புள்ளிப் பட்டியலில் ஆண்கள் பிரிவில் இரண்டாவது பாடசாலையாகவும் அஞ்சலோட்டப் போட்டிப் பிரிவில் மாகாண மட்டத்தில் மூன்றாவது பாடசாலையாகவும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இருபது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சிறந்த மெய்வல்லுநராக இப்பாடசாலையின் கே.அஹமட் நுஸ்பான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் போது குறித்த தூரத்தினை 11.10 செக்கன்களில் ஓடி முடித்து மாகாண மட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். இம்மாணவர் 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் போது குறித்த தூரத்தினை22.49 செக்கன்களில் ஓடி புதிய மாகாண சாதனையினையும் நிலைநாட்டியுள்ளார்.
இதேவேளை 20 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின்போது ஏ.என்.அலா அம்தான் மாகாண புதிய சாதனையினையும் நிலை நாட்டியதுடன், இப்பாடசாலையின் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 4 100
மீற்றர் ஓட்டப் போட்டியின் போது இப்பாடசாலை மாணவர்கள் புதிய மாகாண சாதனையினையும் நிலைநாட்டியுள் ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours