(எம்.ஏ.றமீஸ்)

இஸ்லாத்தின் இறுதித்தூதர் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தினையொட்டி அக்கரைப்பற்று ஏஸ்  கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாநுன் நபி தின விழா இன்று(28) அக்கரைப்பற்று எப்.என்.வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் பி.ரி.செய்னுலாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அல்-குர்ஆன் தமாம் வைபவம் இடம்பெற்றதுடன், விஷேட சமைய நிகழ்களும் அன்னதான வைபவமும்; இடம்பெற்றது.
இதேவேளை, இந்நிகழ்வின்போது நபி முகம்மது (ஸல்) அவர்களின் முன்மாதிரி பற்றியும் சமூக ஒற்றுமைக்கான இறைத் தூதரின் வாழ்வியல் முறை பற்றியும் விஷேட மார்க்க சொற்பொழிவு இடம்பெற்துடன், உலக மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்காக விஷேட துஆப் பிராந்தனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours