(எம்.ஏ.றமீஸ்)
அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எம்.எம்.ஜஃபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜெயபத்ம, பிரதேச செயலாளர்களான எம்.ஏ.சி.அஹமட் சாபிர், எஸ்.எல்.எம்.ஹனீபா, எம்.ஐ.எம்.பிரினாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஓய்வு நிலை உதவி பொலிஸ் அத்திட்சகர் ஏ.வாஹித், அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜுனைதீன், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர்களான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், எம்.ஏ.றாசீக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன்போது அதிதிகளாய்க் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியாக சேவையாற்றி வந்த நிலையில், ஓய்வு பெற்ற எம்.எஸ்.அப்துல் மஜீத் பொதுமக்களுடன் சினேக பூர்வமான உறவினைப் பேணி வந்தார். தனது 34 வருட சேவையினை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டு மக்கள் மத்தியிலும் பொலிஸ் திணைக்களத்திலும் நற்பெறரைப் பெற்றுக் கொண்டார்.
இவரது சேவையினைப் பாராட்டும் வகையில் தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சேவை நலன் பாராட்டு விழாவின்போது அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours