( வி.ரி. சகாதேவராஜா)

தம்பிலுவில் பிரதேசத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த திருக்கோவிலுக்கான உப மின்சார சபை  பணிமனை  தரமுயர்த்தப்பட்டு திருக்கோவிலில் அரச புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

 திருக்கோவில் பிரதே செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திறப்பு விழா உத்தியோக பூர்வமாக  இடம் பெற்றது.


இப்புதிய பூரணமான பணிமனை இலங்கை மின்சார சபையின் கிழக்குமாகாண பிரதிப்பொதுமுகாமையாளர்  கே.விஜயதுங்கவினால் திறந்துவைக்கப்பட்டது..

இவ் நிகழ்வில் அம்பாறை பிரதான  தலைமை பொறியலாளர் எம்.ப(f)ர்கான் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுபதிகாரி பி.பத்மகுமார , திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் க்.சதிசேகரன்  மற்றும்  மின்சார சபை பொறியலாளர்களான யூ.மயூரன், எம் எலா.ஹரீஸ்மொகமட் உதவிப்பொறியலாளர் எம்.நவ்பல், திருக்கோவில் மின்சாரt சபை அத்தியட்சகர் ஏ.அசோகதீபன், அத்தியட்சகர் சுலக் ஷன் , சட்டத்தரணி யேகசுதன்  ஆகியோரும் மின்சார சபை உழியர்கள் ,பொதுமக்கள் கிராம உறுப்பினர்கள் ,கிராம சேவகர்கள், மதகுருமார், நலன்விரும்பிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்...

முன்னதாக மாணவர்களின் வருவற்பு நடன நிகழ்வும் தேசியகொடி மற்றும் மின்சார சபை கொடிகள் அதிதிகளினால்  ஏற்றப்பட்டதுடன் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு. அங்குசநாத குருக்கள் ஆசிர்வாதஉரையும் நிகழ்த்தப்பட்டது..




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours