(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை அல்-பஹ்ரியா மகா தேசிய பாடசாலையில்  அம்பாறை மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் ,பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால்  தலைமையில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வின் போது பாவனையாளர் உரிமைகள்  பொறுப்புக்கள் , சட்டங்கள் ,பாதுகாப்பு , பொருட்கள் கொள்வனவின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் , தற்போதைய சந்தையில் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.  

இந்நிகழ்வு பாடசாலையின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவு பொறுப்பாசிரியர் ஜானுன் நௌசாத்  நெறிப்படுத்தலில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்  மாவட்ட செயலக அம்பாறை புலனாய்வு உத்தியோகத்தர்களான
இஸட்.எம்.ஸாஜீத் ,ஏ.பி.எம்..காமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours