( வி.ரி.சகாதேவராஜா)

கடந்த நான்கு வருடங்களாக சத்திரசிகிச்சைக்காக காத்திருந்த  கண்புரை(Cataract)  120 நோயாளிகளுக்கு கண்புரை சத்திரசிகிச்சை இலவசஞ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லண்டன் புனர் வாழ்வும் புதுவாழ்வும் (Assist RR - UK) என்ற அமைப்பு இலவசமாக அம்பாறை பொது வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாக நடத்தி வைத்தனர்.

 புனர்வாழ்வும் புது வாழ்வும் அமைப்பின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் மற்றும் இலங்கைக்கான தலைவர் பொறியியலாளர் ஹென்றி அமல்ராஜ் ஆகியோர்  முன்னிலையில் நின்று செயல்பட்டனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜயசிரி டயஸ் தலைமையிலான குழுவினர் இந்த சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டார்கள்.

இந்த மனிதாபிமான மணிக்கு மலேசியா ஆனந்தா பவுண்டேஷன் மற்றும் அலாகா பவுண்டேஷன் அனுசரணை வழங்கி இருந்தார்கள் .

120 பேருக்கு இந்த கண்புரைநோய் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதற்கு அந்த மக்கள்  அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours