.


(எஸ்.அஷ்ரப்கான்)

தொடர்பாடல் ஊடாக மாற்றத்தினை உருவாக்குதல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளின் சுகாதார சேவையினை மேம்படுத்தும் நோக்கில் பிராந்திய பணிமனையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக பிராந்திய வைத்தியசாலைகளின் சுகாதார கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு தொடர்பான மீளாய்வுக்கூட்டம் நேற்று (17) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய பொதுச் சுகாதாரப் பிரிவு மற்றும் சுகாதார கல்வி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கூட்டம் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய பிரிவு தலைவர்கள், வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்தியர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாதிய பரிபாலகர்கள், விடுதி முகாமையாளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், பொதுச்சுகாதார மற்றும் தர முகாமைத்துவப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி, சுற்றுச்சூழல், தொழில் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் மாவட்ட சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.பைறூஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு இந்நிகழ்வில் விரிவுரையாற்றினர். 

வைத்தியசாலைகளின் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி பொது மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குதல் எனும் தலைப்பில் பணிப்பாளர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்கள் விசேட உரை ஒன்றிணையும் இக்கூட்டத்தின் போது நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

நோயாளர்களை கையாளும் முறை, ஊழியர்களை வலுவூட்டுதல், சுகாதார மேம்படுத்தல் நடவடிக்கைகளின் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் இதன்போது அலசி ஆராயப்பட்டதுடன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சுகாதார கல்வி, சுகாதார மேம்பாடு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், நூல்கள் என்பனவும் வழங்கப்பட்டன.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours