சா.சபேசன் 

இலங்கை வாழ் உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு விழா 22.10.2023  ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை  சுவிஸ் நாட்டில்  ;   treffpunkt wittig kofen   jupiterstrasse 15,3015 Bern  எனும் இடத்தில் தலைவர் ரி.சுதர்சன் தலைமையில் மிகவும் சிறப்பாக  இடம்பெறது

சுவிஸ் உதயம் அமைப்பானது 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையின் பின்னர் சுவிஸ் நாட்டிலே வாழும் இலங்கையர்களால் உருவாக்கப்பட்டு அதன் கிளையாக இலங்கையில் கிழக்குமாகாண சுவிஸ் உதயம் அமைப்பு எனும் நாமத்துடன் இனம் மதம் கடந்து பல்வேறு சமூகசேவைகளைச்செய்துவருகின்றன

கல்வி,வாழ்வாதாரம் நோய்யுற்றவர்களின் சிகிச்சைக்கான உதவி பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான உதவி போன்றவற்றை சுமார் 19 வருடங்களாக  இவ் அமைப்பு செய்துவருகின்றது சுவிஸ் நாட்டில் வாழும் நல்லுள்ளம் கொண்ட சிலரது சிறுதொகைப் பணங்களைச் சேகரித்து இலங்கைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன இவ் அமைப்பின் தலைமை அலுவலகம் மட்டக்களப்பு திராய்மடு பனிச்சையடியில் இயங்கிக்கொண்டு வருகின்றது.

இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன்  பொருளாளர் க.துரைநாயகம்  உதவித் தலைவர் கே.தியாகராஜா,உதவிச்செயலாளர் எஸ்.சுவாஸ்கோ,மற்றும் நிருவாகசபை உறுப்பினர் கே.தர்மபாலன்   கே.கஜேந்திரன்,ஜெயதரன் பஞ்சாட்சரம்,எட்வேட் சிறி, வி.பேரின்பராஜா பி.ஜெயதரன் எப்.ஆர்.சின்னத்தம்பிமற்றும் இளையோர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா இடம்பெற்றது.

இளையராகங்கள் அலோசியஸ் அவர்களது மின்னல் கரோக்கி இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அதிஷ்டலாபச் சீட்டிடும்  இடம்பெற்றது முதலாம் பரிசு ஒன்றரைப் பவுண் நெக்லஸ் வெற்றிபெற்றவர் ஜெனனி பேண், இரண்டாம் பரிசு ஒருபவுண் மாலை வெற்றிபெற்றவர் சிறிதரன் செங்காலன்,மூன்றாம் பரிசு அரைப்பவுன் மோதிரம் வெற்றிபெற்றவர் ஜெகன் சூரிச் ஆகியோர் அதிஷ்டசாலியாக தெரிவுசெய்யப்பட்டு பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.அதேவேளை இவ் ஆண்டுவிழாவிற்கு உதவிய அனைவருக்கும் நன்றிதெரிவிப்பதாக செயலாளர் அம்பலவாணர் ராஜன் தெரிவித்தார்.

 .






















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours