(எம்.ஏ.றமீஸ்)
இவ்வாண்டுக்கான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று(15) நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றது. இதற்கமைவாக, கல்முனை கல்வி மாவட்டத்தின் கீழுள்ள அக்கரைப்பற்று, கல்முனை, திருக்கோவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களில் சுமூகமான முறையில் இப்பரீட்சை இடம்பெற்றது.
கல்முனை கல்வி மாவட்டத்தில் இம்முறை 72 பரீட்சை மத்திய நிலையங்களில் இப் பரீட்சை இடம்பெற்றது. 8156 மாணவர்கள் இம்மாவட்டத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 4151 ஆண் மாணவர்களும், 4005 பெண் மாணவிகளும் இப்பரீட்சைக்காக தோற்றியிருந்தனர்.
இம்முறை 8125 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும், 31 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும் இப்பரீட்சையில் தோற்றியிருந்தனர். பரீட்சைக் கடமைக்காக 650 கல்வித்துறை அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றோர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இப்பரீட்சைக்காக கல்முனை கல்வி வலயத்தில் 3095 மாணவர்களும், சம்மாந்துறை கல்வி வலயத்தில் 1735 மாணவர்களும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 2314 மாணவர்களும், திருக்கோவில் கல்வி வலயத்தில் 1012 மாணவர்களும் தோற்றியிருந்தனர்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 22 பரீட்சை மத்திய நிலையங்களிலும், திருக்கோவில் கல்வி வலயத்தில் 10 மத்திய நிலையங்களிலும், கல்முனை கல்வி வலயத்தில் 26 மத்திய நிலையங்களிலும், சம்மாந்துறை கல்வி வலயத்தில் 14 மத்திய நிலையங்களிலும் இப்பரீட்சை இடம்பெற்றது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இரண்டு இணைப்பு நிலையங்கள் இப்பரீட்சைக்காக செயற்பட்டன. இவ்விணைப்பு நிலையங்கள் மூலம் பரீட்சைக்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கல்வி வலயத்தின் கீழுள்ள அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய கல்விக் கோட்டங்களில் தலா எட்டு பரீட்சை மத்திய நிலையங்களிலும், பொத்துவில் கல்விக் கோட்டத்தில் ஆறு மத்திய நிலையங்களிலும் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours