(எம்.ஏ.றமீஸ்)
இன்று அதிகாலை 4.30 மணியளவில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியினை அண்டிய மக்கள் குடியிருப்புக்குள் உட்புகுந்த இக்காட்டு யானைகள் வீடுகள் மற்றும் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை போன்றவற்றின் சுற்று மதிற்சுவர்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் பயன் தரும் பல மரங்களையும் நாசம் செய்துள்ளன.
மேட்டு நிலப் பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் பலவற்றையும் இக்காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இரவு வேளைகளில் காட்டு யானைகள் பல இப்பிரதேசத்தில் நடமாடுவதால் பல்வேறான இன்னல்களுக்கு தாம் தினமும் முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப் படுத்தியும் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகளுக்காக களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த பெறுமதி மிக்க உணவுப் பைகளை இக்காட்டு யானைகள் கட்டடங்களின் சுவர்களை உடைத்து உண்டு நாசப் படுத்தியுள்ளதுடன் மக்களையும் அச்சப்படுத்தியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி மற்றும் அட்டாளைச்சேனை சம்புக்களப்பு போன்ற மக்கள் குடியிருப்புப் பகுதியினை அண்டிய பகுதி நீரேந்து பிரதேசமாகவும் நீர்த்தாவரங்கள் மற்றும் சிறிய பற்றைக்காடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன. இப்பகுதியில் பகல் வேளைகளில் தரித்து நிற்கும் காட்டு யானைகள் இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து பல்வேறான தேசங்களை உண்டு பண்ணி வருவதுடன் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்களையும் உண்டு பண்ணி வருகின்றன.
Post A Comment:
0 comments so far,add yours