(எம்.ஏ.ஏ.அக்தார்)

வறுமக் கோட்டின் கீழ் வாழும் கர்ப்பிணி தாய்மாருக்கு போசணைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான கொக்கட்டிச்சோலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட 100 கர்ப்பிணி தாய்மாருக்கு தலா 10,000 ரூபாய் பெறுமதியான  போசணைப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன. 

கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு கிழக்கு மாகாண இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரெட்னவின் ஆலோசனையின் பேரில் வழங்கப்பட்டது.
 இவ் உதவிக்கு சர்வமத அமைதிக்கான அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது. 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours