நூருல் ஹுதா உமர் 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற Diploma in Counseling , Diploma in English ஆகிய பாடநெறிகளை 2017/2018 மற்றும் 2018/2019 ஆகிய கல்வியாண்டுகளில் கற்று தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2023.10.08 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதி பதிவாளர் எஸ்.சிவக்குமாரின் வழிகாட்டலில் குறித்த நிலையத்தின் பதில் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா எம்.ஜி.எச். ஆகியோரும் நூலகர் எம்.எம். றிபாவுதீன், பதில் நிதியாளர் சி.எம்.வன்னியாராச்சி மற்றும் பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரயளர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours