இடி மின்னல் தாக்கம் ஏற்பட்ட வேளை ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் வீச்சு வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்துக்குள்ளனர்.
ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் நிஜாமுதீன் (34) ஸ்தலத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
என். முகம்மது இம்தியாஸ் (13), என். பாத்திமா நிப்றா (08), என். முகம்மட் இம்ரான் (05), என். முகம்மட் இம்தியாஸ் (03) ஆகிய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
மின்னல் தாக்கத்துக்குள்ளன ஏனைய மூவருமான ஒலுவில் ஏழாம் பிரிவைச் சேர்ந்த இல்முடீன் (32), ஒலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த எஸ். எம் அஹமட் (50) ஒலுவில் நான்காம் பிரிவைச் சேர்ந்த கே.அஸ்மின் (36) ஆகியோர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours