(ஏ.எஸ்.மெளலானா)


துருக்கியின் இலங்கைக்கான தூதுவர் டமெட் ஷெகர்ஜியளு அவர்களை கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் நிலவும் பிரச்சினைகள், விஷேட தேவையுடையோர், குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்கள், வறிய பாடசாலை மாணவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் மற்றும் கணவனை இழந்த விதவைகளுக்கான வாழ்வாதார உதவிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவுமாறு கோரி மகஜர் ஒன்றையும் துருக்கி தூதுவரிடம் அவர் கையளித்தார்.

இவைகளை கவனத்திற் கொண்டு துருக்கி மக்கள் சார்பில் விரைவாக உதவிகளை பெற்றுத் தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக தூதுவர் உறுதியளித்துள்ளார்..

மேலும், இச்சந்திப்பின்போது இருதரப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours