(அஸ்ஹர் இப்றாஹிம்)
"பயிர் வளர்போம் பயன் பெறுவோம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் பன்னீர்ச்செல்வம் சுகிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பாடசாலை வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த பாடசாலை தோட்ட மரக்கறி பயிர்களின் அறுவடை வியாளக்கிழமை (26) இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள் புத்தகக்கல்வியில் கவனம் செலுத்தும் அதே வேளை ஓய்வு நேரங்களில் பொருளாதார ரீதியில் தம்மையும் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்ள புறக்கிருத்திய செயற்பாடாக பாடசாலை காலங்களிலே ஆசிரியர்களினால் சிறந்த முறையில் பயிற்சியளிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் , பாடசாலை தோட்டத்தில் பயிரிடப்பட்ட மரக்கறிகள் அறுவடையில் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றமை விஷேட அம்சமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours