எழில்வேந்தன்

நவராத்திரி விழாவினை முன்னிட்டு பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை தொடர்மாடியில் நடைபெறும் இலவசவகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு லண்டனில் உள்ள ஜே.ஆர் அச்சகத்தினால்  பாலா ரவி அவர்களினால் நாவராத்தி பாடல்கள் அடங்கிய நூல் தொகுதி இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு சனிக்கிழமை அமைப்பின் தலைவர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் இடம்பெற்றது.

இந்து மாணவர்களுக்காக இவரால் முன்னெடுக்கும் இப்பணியினைப் பலரும் பாராட்டியுள்ளதுடன் தொடர்மாடியில் நடைபெறும் இலவசவகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இப்புத்தகத்தினை வழங்கிய லண்டனில் இருக்கும் ஜே.ஆர் அச்சகத்திற்கும்   பாலா ரவி அவர்களுக்கும் இப்பாடசாலை நிருவாகமும் பிரதேச இந்துமக்களும் நன்றிதெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் அதிதிகாளாக பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகர் சந்திரசேகரம்  அதிபர் தங்கவேல் ஊடகவியலாளர் சா.நடனசபேசன் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்





















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours