பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட புத்தக பைகளை பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் நாவிதன்வெளி அஸ் சிராஜ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதன் போது கல்முனை பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைப்பாளர் பி.எம்.எம் ஜௌபர் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான ரணுஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நியாஸ் பிரத்தியேக இணைப்பாளர் முபாறக் உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதன்கிழமை(25) கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வேண்டுகோளின் பேரில் சீனாவின் யூவான் மாகாணத்தால் மாணவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகை பாடசாலை பைகள் அஸ் சிராஜ் மகா வித்தியாலய பாடசாலைகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours